பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

பாதுகாப்பு கேட்டு நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் கழுத்தில் மாலையுடன் வந்து தஞ்சம் அடைந்த காதல் ஜோடி ஒன்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (வயது 20), பிரியதர்ஷினி (19) என்பது தெரியவந்தது. கதிரேசன் பொக்லைன் ஆபரேட்டராக உள்ளார். பிரியதர்ஷினி கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இளம்பெண்ணின் வீட்டில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணத்துக்கு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதர்ஷினியும், கதிரேசனும் நெல்லை டவுனுக்கு வந்து அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி காதல் ஜோடியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story