கூரை வீடு எரிந்து நாசம்


கூரை வீடு எரிந்து நாசம்
x

பிள்ளைபெருமாள் நல்லூரில் கூரை வீடு எரிந்து நாசமானது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

பிள்ளை பெருமாள்நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நடுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி கவிதா. இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கவிதா சமையல் செய்து கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ வீடுமுழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீவிபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டி.வி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பத்திர ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நிவேதா முருகன் எம்.எல்.ஏ.,நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா, ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story