அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்தது


அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்தது
x

அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் குடுமியான்மலையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில் 20 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கூரையின் உட்புற சிமெண்டு பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால் குழந்தைகள் உயிர் தப்பினர். எனவே குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story