ஊரக வளர்ச்சி துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சி துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-25T01:00:18+05:30)

ஊரக வளர்ச்சி துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் தளியில் அலுவலகம் வெறிச்சோடியது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மைய முடிவின்படி விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் அதிகாரிகள், அலுவலர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். தளி, கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story