பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டே சென்ற பள்ளி மாணவன்...கால் கட்டை விரல் துண்டாகிப் போன பரிதாபம்


பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டே சென்ற பள்ளி மாணவன்...கால் கட்டை விரல் துண்டாகிப் போன பரிதாபம்
x

புதுக்கோட்டையில் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பள்ளி மாணவனின் கால் கட்டை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவன் பயணம் செய்த போது கால் கட்டை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ரான்விடுதியைச் சேர்ந்த கார்த்திக் கறம்பக்குடியில் இருந்து, கொத்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்துள்ளார்.

அப்போது, ஆலங்குடி அருகே பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, மாணவனின் கால் கட்டை விரல் துண்டானது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதுடன், படிக்கட்டில் அலட்சியத்துடன் நிற்பதும் இத்தகைய விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.


Next Story