இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது


இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 6:45 PM GMT)

தோணித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதப்படுத்தாமல் இருக்க கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர். இறந்தது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 1500 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கலாம் எனவும், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் வனத்துறையினர் பள்ளம் தோண்டி புதைத்தனர்.


Related Tags :
Next Story