கல்லார் பழப்பண்ணைக்கு வேறு இடம்தேடும் பணி தீவிரம்
கல்லார் பழப்பண்ணையை இடமாற்ற வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இடம் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கல்லார் பழப்பண்ணையை இடமாற்ற வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இடம் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கல்லார் பழப்பண்ணை
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதை அருகே கல்லாரில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் பழப் பண்ணை உள்ளது. 122 ஆண்டு பழமைவாய்ந்த இந்த பழப்பண் ணை 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
அங்கு துரியன், கிவி, மா, வெண்ணெய் லிச்சி, ரம்புட்டான், பலா, பாக்கு, ஜாதிக்காய் போன்ற அரிய தாவரங்கள், மூலிகைகள், மலர் வகைகள் என்று பல்வேறு தாவர இனங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் வழித்தடத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக பழப் பண்ணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து கல்லார் பழப்பண்ணையை இடமாற்றுவது குறித்து வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
சாத்தியக்கூறுகள் ஆய்வு
இதையடுத்து பழப்பண்ணையை சிறுமுகை வனச்சரகம் சென்ன மலை கரடு, சிறுமுகை அருகே உள்ளிட்ட சில இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வனத்துறை பரிந்துரைத்தது.
ஆனால் அது, நீலகிரி மலையடிவாரத்தில் விளையும் செடிகள் மற்றும் மரவகைக ளுக்கு ஏற்ற நிலப்பரப்பு, தட்பவெப்பநிலைக்கு ஏற்ற இடமாக இல்லாமல் இருப்பதாக தோட்டக்கலைத்துறையினர் கருதுகின்றனர்.
கல்லாரில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் செம்ஸ்போர்டில் உள்ள ஒரு நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அது தமிழ்நாடு தனியார் பாதுகாப்பு சட்டம் 1949-ல் உள்ளதால் தேர்வு செய்ய முடியவில்லை என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானைகள் கடக்கும் பகுதி
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, கல்லாறு பழப்பண்ணையை இடமாற்றம் செய்ய சரியான இடத் தை கையகப்படுத்தி கொடுக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
அவர்கள், வனத்துறை, தோட்டக்கலை துறையுடன் இணைந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றனர்.
இயற்கை ஆர்வர்கள் கூறும்போது, யானைகள் எளிதாக வனத்தை கடக்க கல்லார் பழப்பண்ணை இடையூறாக உள்ளது எனவே அதை இடம்மாற்றுவதுஅவசியம் என்றனர்.