புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்


புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்
x

திசையன்விளையில் புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திசையன்விளை மணலிவிளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த மகராஜன் மகன் பேச்சிமுத்து (வயது 26) என்பவரது பெட்டிக்கடையை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேச்சிமுத்துவை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story