கடையை உடைத்து 7 செல்போன்கள் திருட்டு
வால்பாறையில் கடையை உடைத்து 7 செல்போன்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வால்பாறை
வால்பாறையில் கடையை உடைத்து 7 செல்போன்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
செல்போன்கள் திருட்டு
வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அகமது சாதிக்(வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கடையில் பொருள் ஒன்றை எடுப்பதற்காக மீண்டும் வந்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது 7 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து முகமது சாதிக், வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
2 சிறுவர்கள் கைது
அதில், அந்த பகுதியில் நடமாடிய தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய 2 வடமாநில சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 7 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.