சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா-கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது


சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா-கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
x

சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா-கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகனை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2-ம் நாள் திருவிழாவின் போது அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 3-ம் நாள் நிகழ்ச்சியில் கைலாசபர்வத வாகனத்திலும், 4-ம் நாள் நிகழ்ச்சியில் வேதாள வாகனத்திலும், 5-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்திலும், 6-ம் நாள் நிகழ்ச்சியில் வெள்ளி ரிஷப வாகனத் திலும், 7-ம் நாள் நிகழ்ச்சியில் புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் யானை வாகனத்திலும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா 9-ந்தேதி (ஞாயிறு) நடக்கிறது. அன்று குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9-ம் நாள் திருவிழாவான கயிறு குத்து நிகழ்ச்சி 10-ந்தேதி (திங்கள்) அன்று நடக்கிறது.

இதில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 10-ம் நாள் விழா 12-ந்தேதி நடக்கிறது. அன்று தேர்திருவிழா நடக்க உள்ளது. பங்குனி பொங்கல் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார் உறவின் முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story