புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்...!


புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்...!
x

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

இதில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story