பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி - இன்று நடைபெறுகிறது


பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி - இன்று நடைபெறுகிறது
x
தினத்தந்தி 1 Oct 2023 3:30 AM GMT (Updated: 1 Oct 2023 3:32 AM GMT)

பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

சென்னை

சென்னையில் உள்ள பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் ஆண்டுதோறும் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி பெரம்பூர் ரெயில் கல்யாண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு வைபவம் மற்றும் திருவேங்கடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு பெரம்பூர் ரெயில் கல்யாண மண்டபத்தை வந்தடைந்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பெரம்பூர் ரெயில் கல்யாண மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடர்ந்து காசியாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல், நடன நிகழ்ச்சியும், பிற்பகல் 12.30 மணிக்குள் சீனிவாச திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் தலைவர் டி.பாபு, செயலாளர் வெங்கட்ராமன் சேஷன், அறங்காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story