பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமில் 18,08,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இன்று 32வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஒரே நாளில் 18.8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மாவட்ட அளவில் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்தி உள்ளோம்.

இன்னும் 65 நாட்கள் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். பாதிப்பு குறைகிறது என்ற எண்ணத்தை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கம்மை பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம்.

கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்களும், வீராங்கனைகளும் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். இதேநேரம், கொரோனாவோடு சேர்த்து குரங்கம்மை வைரஸ் பாதிப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

எனவே, செஸ் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story