தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்


தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
x

அரூரில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள அச்சல்வாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 27- ந்தேதி தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். ஆனால் மீண்டும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியில் சென்று விசாரித்தனர். அப்போது மாணவி தேர்வு எழுதவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.


Next Story