மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
x

ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள் பிரகாசம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமான முறையில் தகாத வார்த்தைகள் பேசி வந்ததாகவும், பள்ளி நேரத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவ மாணவிகள் ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலரிடம் அருள் பிரகாசம் தகாத வார்த்தைகள் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அருள் பிரகாசத்தை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

1 More update

Next Story