பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

ஆங்கில புத்தாண்டை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

காஞ்சிபுரம்

சட்டப்படி நடவடிக்கை

ஆங்கில புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் காவல் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் போலீசார் மாவட்டம் முழுவதும் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கேக் வழங்கி வாழ்த்து

போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், காஞ்சீபுரம் பஸ் நிலைய சிக்னல் அருகே காவல் பணியில் ஈடுபட்ட போலீசாருடன் இணைந்து பணிகளை கண்காணித்து வந்தார்.

சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததையொட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சாலை வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் இணைந்து சாலையில் பிரமாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், அவர்களுக்கு கேக், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் கூறுகையில்:-

புத்தாண்டுக்கு பொதுமக்களுக்கு தெரிவித்த நெறிமுறைகளை கடைபிடித்து எந்த ஒரு பெரிய அசம்பாவிதமும் நிகழாமல் புத்தாண்டை எளிமையான முறையிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொதுமக்களுக்கு நன்றி

இந்த செயலுக்கு உறுதுணையாக காவல் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கும் அதற்கு பெரிதும் ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும் மகிழ்ச்சி என்பது அனைவரிடத்திலும் வெளிப்பட வேண்டிய விஷயம் எனவும் அதனைதான் பொதுமக்களுடன் காவல்துறையின் உறவு மேம்படும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

சாலை சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீர் என போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

இதனைத் தொடர்ந்து கேக் வெட்டும் நிகழ்வை கண்ட பெல்ஜியம் நாட்டை சார்ந்த பெண்மணி கூறுகையில், இது போன்று நிகழ்வு நான் பார்த்ததில்லை, இது புதிதாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது என கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.


Next Story