முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,


தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

ஜனவரி 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுதல், புதிய தொழில் திட்டங்களை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.


Next Story