முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது.

இந்த சுழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வெளிநாடு செல்ல ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து முதலீடு பெறுவது என்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதேநேரம், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அதற்கேற்ப பணியாற்றும் வகையில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story