நெல்லுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தது தமிழக அரசு


நெல்லுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தது தமிழக அரசு
x

நெல்லுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நேரடி நெல் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய விலை உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண நெல் ஒரு குவிண்டால் - ரூ2,115,சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,160-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story