விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு


விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
x

ஜோலார்பேட்டை அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மண்டலவாடி ஊராட்சியில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிளிகளையும் வழங்குகிறார். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றுதல், செட்டியப்பனூர் மற்றும் ஆசிரியர் நகர் பகுதியில் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பயணிகள் நிழற்கூடம் திறப்பு ஆகியவற்றிலும் அவர் கலந்து கொள்கிறார்.

கலெக்டர் ஆய்வு

இதற்காக மண்டலவாடி ஊராட்சி பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது விழா மேடை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன பயணிகள் நிழற்கூடத்தையும் ஆய்வு செய்தனர்.

அப்பகுதியில் உள்ள கடை போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றி இடத்தை தூய்மை செய்யவும், நிழற் கூடத்தில் நடைபெற்று வரும் மின் இணைப்பு பணிகள், டைல்ஸ் ஒட்டுதல், பெயிண்டிங் உள்ளிட்ட பணிகளை தரமான முறையில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருள்நிதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.ஞானவேல் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story