தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்த ஆசிரியை


தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்த ஆசிரியை
x

தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்த ஆசிரியை

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கோபால் நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருடைய மனைவி கீதா(வயது 33). யோகா ஆசிரியையான இவர், உணவு ஆலோசகராகவும் செயல்படுகிறார். இவர்களுக்கு சாய் பிரணவ்(2) என்ற மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் கீதா, உலக யோகா தினத்தையொட்டி இன்று 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி பத்ம ஆசனம், நின்ற பாத ஆசனம், பத்மகோபுர ஆசனம், கோபுர ஆசனம் உள்பட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார்.இதுகுறித்து கீதா கூறும்போது, நான் பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் யோகா கற்றேன். பின்னர் சூலூரில் நாராயணசுவாமி குருவிடம் யோகா கற்றேன். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தண்ணீரில் யோகா செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி இருக்காது. இதனால் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தண்ணீரில் மிதந்து யோகா செய்து வருகிறேன். இன்னும் 6 மாதத்தில் கின்னஸ் சாதனைக்காக 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.


Next Story