அரசு பஸ்சை "அலேக்காக" தூக்க முயன்ற வாலிபர்...! நெல்லையில் குடிமகன் செய்த அட்டகாசம்
வள்ளியூர் பேருந்து நிலையதில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் பஸ்சை தூக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் குடிபோதையில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தார். அப்போது போதை குறைந்ததால் சாலையோரம் தரையில் அமர்ந்து மீண்டும் மது குடித்து போதை ஏற்றிக் கொண்டார்.
இதனால் தலைக்கு ஏறிய அதி போதையால் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடினார். பின்னர், அங்கு வந்த ஒரு அரசு பஸ்சை மறித்த அந்த குடிமகன், போதையில் பஸ்சை தூக்க முயன்றார். மேலும், பஸ்சை தூக்க அருகில் இருந்தவர்களையும் உதவிக்கு அழைத்து வள்ளியூர் பேருந்துநிலையத்தில் குடிமகன் அட்டகாசம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story