நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது மனு கொடுக்க வந்த நெல்லை டவுனை சேர்ந்த சிவகார்த்திகேயன் (வயது 28) என்பவர் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை தாண்டி அலுவலக வளாகத்திற்குள் சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு

பின்னர் சிவகார்த்திகேயனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்ேபாது, அவர் கூறுகையில், கடந்த 2012-ம் ஆண்டு கூட்டுறவு தணிக்கை துறையில் அதிகாரியாக பணியாற்றிய எனது தந்தை சந்திரசேகர் பணியின் போது உயிரிழந்தார். வாரிசு அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த 2012-ம் ஆண்டு முதல் போராடி வருகிறேன். பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் இதுவரை பணி வழங்கப்படவில்லை.

மேலும் கடந்த 2020-ம் ஆண்டு எனது வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள் திருடப்பட்டது. இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்' என்றார்.


Next Story