தந்தை-மகன் மீது தாக்குதல்; வாலிபர் கைது


தந்தை-மகன் மீது தாக்குதல்; வாலிபர் கைது
x

தந்தை-மகன் மீது தாக்குதல் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 50). இவர் சீவலப்பேரியில் செங்கல்சூளை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரும், அவரது மகன் இசக்கிராஜாவும் (24) செங்கல்சூளையில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின் அண்ணன் முண்டசாமி (60), அவரது மகன் பேச்சிமுத்து (25) ஆகியோர் சேர்ந்து முத்து, இசக்கிராஜா ஆகியோரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சிமுத்துவை கைது செய்தனர்.


Next Story