வாலிபர் கைது


வாலிபர் கைது
x

வாலிபர் கைது

திருவாரூர்

மன்னார்குடி சின்னம்மாள் நகரில் வசித்து வருபவர் கணேசன். கடந்த மாதம் 24-ந்தேதி பூட்டிக்கிடந்த இவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அன்று இரவே இதே பகுதியில் வசித்து வரும் பிரபாவதி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 6½ பவுன் நகைகளை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி போலீசார் தஞ்சை மாவட்டம் வல்லம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 2 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story