வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு


வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு
x

தஞ்சையில் வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சையில் வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முகவரி கேட்பதுபோல்...

தஞ்சை நீலகிரி தெற்கு தோட்டம் லட்சுமி விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சிவசசிவர்ணன்(வயது 19). சம்பவத்தன்று இவர் திருவையாறு புறவழிச்சாலை அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து 2 பேர் முகவரி கேட்பது போல் சிவசசிவர்ணனிடம் பேச்சுகொடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கேட்டுள்ளனர். இதற்கு சிவசசிவர்ணன் மறுத்த நிலையில் அவரின் வலது கை மற்றும் வலது கால் பகுதியில் கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இது குறித்து சிவசசிவர்ணன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story