மடிக்கணினியை திருடிய இளம்பெண்; ஊழியர்களிடம் சிக்கியதால் ஓட்டம்


மடிக்கணினியை திருடிய இளம்பெண்; ஊழியர்களிடம் சிக்கியதால் ஓட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை காந்திபுரத்தில் உள்ள கடையில் மடிக்கணினியை திருடிய இளம்பெண், ஊழியர்களிடம் சிக்கியதால் ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை காந்திபுரத்தில் உள்ள கடையில் மடிக்கணினியை திருடிய இளம்பெண், ஊழியர்களிடம் சிக்கியதால் ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இளம்பெண்

கோவை காந்திபுரத்தில் உள்ள கிராஸ்கட் ரோடு பகுதியில் ஏராளமான கணினி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று கணினி மற்றும் அதற்கான உதிரிபொருட்களை வாங்கிச்செல்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு இளம்பெண் மற்றும் வாலிபர் என 2 பேர் வந்தனர். அவர்கள் அந்த கடையில் உள்ள ஊழியர்களிடம் கணினிக்கு பயன்படுத்தும் மவுஸ் வேண்டும் என்று கேட்டனர். அதை எடுக்க ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

மடிக்கணினி திருட்டு

அப்போது அந்த கடையில் பார்வைக்காக வைத்திருந்த ஒரு லேப்-டாப்பை(மடிக்கணினி) அந்த இளம்பெண் நைசாக திருடி தான் வைத்திருந்த பைக்குள் வைத்தார். பின்னர் அவர் எதுவும் தெரியாததுபோன்று அங்கிருந்த பிற பொருட்களை பார்த்துக்கொண்டு இருந்தார்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து மவுசை எடுத்துவிட்டு வெளியே வந்த ஊழியர்கள், அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் மடிக்கணினி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் மதிப்பு ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தப்பி ஓட்டம்

அப்போது அந்த கடையில் இளம்பெண், வாலிபரை தவிர வேறு யாரும் இல்லை. அதில் அந்த இளம்பெண் மட்டும் பை வைத்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்த இளம்பெண்ணிடம், அவர் வைத்திருந்த பையை திறந்து காட்டும்படி கூறினார்கள்.

இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், தான் வைத்திருந்த பையை திறந்து அதற்குள் இருந்த மடிக்கணினியை எடுத்து அந்த ஊழியர்களிடம் கொடுத்தார்.

பின்னர் அவர் தன்னுடன் வந்த வாலிபருடன் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோ வைரல்

இதற்கிடையே அந்த இளம்பெண், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த மடிக்கணினியை திருடி பைக்குள் வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காட்சியை வைத்து அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story