செலவினங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம்


செலவினங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி  திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம்
x

செலவினங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்,

திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க தலைவர் சக்ரவர்த்தி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் ரவி தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள் உள்பட பலர் நேற்று காலை சங்கு ஊதிக்கொண்டு, மேளம் அடித்தபடி சுகவனேசுவரர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் செலவினங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை சுகவனேசுவரர் சாமியிடம் வழங்கி நூதன போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, சுகவனேசுவரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்கள் சன்னதி பல நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. அதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய விவரங்களை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் கோவிலுக்கு ஆன செலவினங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுகவனேசுவரரிடம் வழங்கி உள்ளோம் என்று கூறினர். இதனால் நேற்று கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story