கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x

ஆற்காட்டில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட ஒப்பந்ததாரர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 53). கட்டிட ஒப்பந்ததாரர். ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரமேஷ் வீட்டில் வேலை செய்பவர் வீட்டின் முன்பக்க பகுதியை பெருக்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவு, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தெரிவித்துள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

50 பவுன் நகை திருட்டு

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு படுக்கை அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோ மற்றும் கபோர்டுகள் திறந்த நிலையில் இருந்தது. பின்னர் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ மற்றும் கபோர்டில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பரான்டு பிரபு, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். வேலூரில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த மற்றும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story