ஸ்கூட்டர் மீது வைத்திருந்த நகை பை திருட்டு


ஸ்கூட்டர் மீது வைத்திருந்த நகை பை திருட்டு
x
தினத்தந்தி 18 July 2023 11:44 PM IST (Updated: 19 July 2023 4:56 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் நகை அடகுக்கடைக்காரர், ஸ்கூட்டர் மீது வைத்திருந்த நகை பையை திருடிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் நகை அடகுக்கடைக்காரர், ஸ்கூட்டர் மீது வைத்திருந்த நகை பையை திருடிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை பை திருட்டு

அரக்கோணம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 82). இவர் சுவால்பேட்டை பகுதியில் அடகுக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வரதராஜன் வழக்கம் போல் இரவு கடையை பூட்டுவதற்காக கையில் வைத்திருந்த நகை பையை ஸ்கூட்டர் மீது வைத்து விட்டு கடையை பூட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் திடீரென ஸ்கூட்டர் மீது இருந்த பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜன் இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரனை மேற்கொண்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

கணவன்- மனைவி கைது

பையை திருடிச்சென்றது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் லைன் தெருவை சார்ந்த ஜெயப்பிரகாஷ் (33) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த சம்பவத்தில் இவரது மனைவி ஜெயசித்ரா (29) மற்றும் உறவினரான ராஜேந்திரன் (25) ஆகியோர் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும் ஜெயசித்ரா, வரதராஜனின் அடகுக் கடையில் வேலை செய்து, கடந்தசில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றதும் தெரிய வந்தது.

இவர்கள் பல நாட்களாக வரதராஜனை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கணவன்- மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.


Next Story