தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு
x

ஏர்வாடி அருகே தொழிலாளி வீட்டில் தங்க நகை திருடு போனது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் எடையுள்ள தங்க கம்மல்கள் திருடு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்ற நேரத்தில் மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story