வீட்டின் கழிவறை சுவரில் துளையிட்டு நகை திருட்டு


வீட்டின் கழிவறை சுவரில் துளையிட்டு நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:45 PM GMT)

திட்டக்குடி அருகே வீட்டின் கழிவறை சுவரில் துளையிட்டு நகை திருடப்பட்டது.

கடலூர்

ராமநத்தம்:

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள பட்டூரை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 49). இவர் சிங்கப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இதற்காக பச்சமுத்து சிங்கப்பூரிலேயே வசித்து வந்தார். மேலும் பட்டூரில் உள்ள வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, இங்கு நடக்கும் நிகழ்வுகளை சிங்கப்பூரில் இருந்தபடி பச்சமுத்து தனது செல்போனில் பார்ப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று கண்காணிப்பு கேமரா இயங்காததால், பட்டூரை சேர்ந்த தனது நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். உடனே அவா் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் கழிவறை சுவரில் துளையிடப்பட்டிருந்தது. இதுபற்றி அவர், பச்சமுத்துவுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பூட்டியே கிடந்த பச்சமுத்து வீட்டின் கழிவறை சுவரில் மர்மநபர்கள் துளையிட்டு உள்ளே புகுந்து பீரோவை உடைத்து, அதில் இருந்த 1½ பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு நகையை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story