ஆரணியில் பட்டபகலில் துணிகரம்.. தனியார் வங்கி ஊழியர் பைக்கில் வைத்த பணம் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை


ஆரணியில் பட்டபகலில் துணிகரம்..  தனியார் வங்கி ஊழியர் பைக்கில் வைத்த பணம் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
x

ஆரணி:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா வாழபந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 34). இவர் தனியார் வங்கியில் வாடிக்கையாளர் மையம் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் ஆரணி உள்ள தனியார் வங்கியில் 2 லட்சத்து 8ஆயிரத்து 300 ரொக்க பணம் எடுத்துள்ளார். அதனை தனது பைக்கில் வைத்து வாழபந்தல் நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது சத்தியமூர்த்தி சாலையில் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கடையின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பணத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் எஸ்ஐ சுந்தரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் கடை அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் சுரேஷை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

ஆரணியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story