மளிகை கடைக்காரரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு


மளிகை கடைக்காரரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மளிகை கடைக்காரரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த டி.பாஞ்சாலம்கிராமத்தை சேர்ந்தவர் வடமலை மகன் பிரபு(வயது 38). மளிகை கடை நடத்தி வரும் இவர் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளசூப்பர் மார்க்கெட் எதிரே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு மளிகை பொருட்கள் வாங்கி வருவதற்காக கடைக்குள் சென்றார். பின்னர் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஸ்கூட்டரின் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பணத்தை காணாததால் இதுகுறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறாா்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story