ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி:

ரவுடி

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்த வழக்கில் ரவுடி மணிகண்டன் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் மீது 4 கொலை முயற்சி வழக்குகளும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாக 18 வழக்குகளும் உள்பட 29 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

அவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

கொலை வழக்கில்...

இதேபோல் திருச்சி மாவட்டம் கொடியாலம் அருகே சுப்பராயபட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(47). மீனவரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் குழுமணி பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கீழசுப்பராயபட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரசாந்த்(25) ஜீயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரசாந்த் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரசாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.


Next Story