4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). இவர் மானூர் அருகே துலுக்கர்பட்டி குளத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (48), ஆலங்குளம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30), நெல்லை குருந்துடையார்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாசாமி (40), இசக்கிமுத்து (23) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

இதில் ராஜசேகர், சரவணன், அப்பாசாமி, இசக்கி முத்து ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று ராஜசேகர் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்காக உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.


Next Story