சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது


சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது
x

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன.

இது தவிர அரசுத்துறை அரங்கங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல் விளக்க அரங்கங்கள், மத்திய அரசின் நிறுவனங்கள், எரிசக்தி துறை அரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம் பெறுகிறது. அரசின் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இந்த பொருட்காட்சியில் மக்களை கவரும் வகையில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த பல்வேறு விளையாட்டு அம்சங்களும் இதில் இடம் பெறுகிறது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

70 நாட்கள் இந்த பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருட்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

1 More update

Next Story