அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி ஒன்றியம், திம்மாபுரம் கிராம நிர்வாக அதிகாரி சித்திக் அலி மற்றும் தலையாரி ராஜேஷ்வரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திம்மாபுரம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் திம்மாபுரத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 24) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளி வந்து ெகாண்டு இருந்தார். அந்த டிராக்டரை கிராம நிர்வாக அதிகாரி சித்திக்அலி மறித்து சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து அ. முக்குளம் போலீஸ் நிலையத்தில் சித்திக் அலி ஒப்படைத்தார். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story