பஸ் மீது மோதியதில் டிராக்டர் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்


பஸ் மீது மோதியதில் டிராக்டர் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
x

பள்ளிப்பட்டு அருகே பஸ்- டிராக்டர் மோதிக்கொண்ட விபத்தில் சாலையோரம் 10 அடி பள்ளத்தில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் பஸ் சோளிங்கர் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் பள்ளிப்பட்டு அருகே குமார ராஜூபேட்டை கணவாய் மேடு மலைப்பகுதி திருப்பத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சோளிங்கரிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பட்டு நோக்கி வந்த ஒரு டிராக்டர் அதே சமயம் அந்த சாலை வளைவில் திரும்பியது. இதில் பஸ்சும் டிராக்டரும் மோதிக்கொண்டது.

இதில் டிராக்டர் நிலைதடுமாறி சாலையொரம் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் டிராக்டரில் இருந்து எகிறி சாலையில் குதித்து உயிர் தப்பினார். விபத்தில் நிலைதடு மாறிய பஸ்ஸை பஸ் டிரைவர் சாமர்த்தியமாக திருப்பி சாலை ஓரமாக நிறுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் சிறுகாயமும் இன்றி உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story