டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி


டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
x

திண்டிவனம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள காட்டுப்பூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனாரப்பன் மகன் கிருஷ்ணன்(வயது 38). இவர் சம்பவத்தன்று மாலை காட்டுப்பூஞ்சை கிராமத்தில் இருந்து டிராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். ஆவணிப்பூர் தரைப்பாலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிராக்டர் என்ஜினுக்கு அடியில் சிக்கிய கிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story