600 புதிய பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது போக்குவரத்துத்துறை..!


600 புதிய பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது போக்குவரத்துத்துறை..!
x

600 புதிய பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story