மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது


மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது
x

மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

வேலூர்

பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையின் பின்புற பகுதியில் உள்ள மரம் ஒன்று காற்று மழையினால் முறிந்து பாண்டியன் வீதியில் குடியிருப்புகளுக்கு செல்லும் மின் கம்பிகள் மீதும், சாலையின் குறுக்கேயும் விழுந்தது. உடனடியாக பொதுமக்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அந்தப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தனர்.


Next Story