பலத்த காற்றில் மரம் வேரோடு சாய்ந்தது


பலத்த காற்றில் மரம் வேரோடு சாய்ந்தது
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பலத்த காற்றில் மரம் வேரோடு சாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். காற்று ரோட்டில் புழுதி மணலையும் வாரி இறைத்தது. இந்த காற்று காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நின்ற ஒரு மரம் வேரோடு சரிந்து, அருகில் நின்ற மாநகராட்சி கழிவுநீர் வாகனம் மீது விழுந்தது. ஆனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. உடனடியாக மாநகராட்சி அலுவலர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.


Next Story