அகழி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்


அகழி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 Aug 2023 1:00 AM IST (Updated: 20 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை பகுதியில் அகழி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை பகுதியில் அகழி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ஊருக்குள் புகுந்த யானைகள்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவர்சோலை பஜார், வுட்பிரையர், செம்பக்கொல்லி, மச்சிகொல்லி மட்டம், காரக்குன்னு, கிரவுன்ட் பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்சோலை அருகே காரக்குன்னு பகுதியில் 4 காட்டுயானைகள் நுழைந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழி தோண்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வனத்துறையினருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அந்த பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.

அகழி

இதுகுறித்து பொதுக்கள் மேலும் கூறுகையில், முதுமலை எல்லை பகுதியான போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி வழியாக மேபீல்டு வரை அகழி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பாடந்தொரையை ஒட்டிய கிராம எல்லைகளில் அகழி அமைக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்து உள்ளது. ஆனால் வேறு வழியாக வுட்பிரையர் மற்றும் தேவர்சோலை பஜார் பகுதிக்குள் காட்டுயானைகள் வருகிறது. இதை தடுக்க காரக்கொல்லி வரை அகழி அமைக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story