லாரி தீப்பிடித்து எரிந்தது


லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

ஊத்தங்கரை அருகே லாரி தீப்பிடித்து 4 லட்சம் மதிப்பிலான மெத்தை தயாரிக்கும் பொருட்கள் எரிந்து சேதமானது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே லாரி தீப்பிடித்து 4 லட்சம் மதிப்பிலான மெத்தை தயாரிக்கும் பொருட்கள் எரிந்்து சேதமானது.

லாரியில் புகை

கோவையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான சோபா, கட்டில் மெத்தை தயாரிக்க தேவையான பஞ்சு மூலதன பொருட்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்றது. லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிரைவர் குமாரசாமி (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார்.

லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னக்கரை காப்புக்காடு பகுதியில் சென்ற போது லாரியில் இருந்து திடீரென புகை வந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டிரைவர் குமாரசாமியிடம் தெரிவித்தனர். அவர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

டீசல் டேங்க் வெடித்தது

சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. தகவல் அறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். லாரியில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது.இந்த விபத்தில் பஞ்சு தயாரிக்கும் மூலப்பொருட்கள், லாரி எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேசிய நெஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story