லாரி மோதி 3 மின் கம்பங்கள் சாய்ந்தன

சிவகங்கையில் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சாய்ந்தன.
சிவகங்கையில் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சாய்ந்தன.
மின்கம்பங்கள் சாய்ந்தன
சிவகங்கை நகரின் முக்கிய வீதியாக இருப்பது காந்தி வீதி பகுதியாகும். இப்பகுதி எப்போதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று காலை இந்த வீதியில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரியின் பின் பக்கம் இருந்த டிரெய்லர் திடீரென்று மேலே துாக்கியது.
இதில் அந்த பகுதியி்ல் மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியது. இதனால் மேலே சென்ற மின்வயர் எதிர்பாராதவிதமாக அறுந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்ற மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
பரபரப்பு
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் அன்புமணி ராம்தாஸ் மற்றும் பாண்டி ஆகியோர் உடனடியாக அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகர் முழுவதுவதும் மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






