மேல்பாதி கோவில் விவகாரம்:அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்திரைப்பட இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு


மேல்பாதி கோவில் விவகாரம்:அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்திரைப்பட இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாதி கோவில் விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டியுள்ளாா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரான திரைப்பட இயக்குனர் கவுதமன் மேல்பாதி கிராமத்துக்கு நேரில் சென்றார். பின்னர் அங்குள்ள மக்களை காலை 9 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மேல்பாதி கிராமத்திற்கு அனுமதியின்றி வந்ததாக கூறி கவுதமனை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் விசாரணை நடத்தினார். அப்போது மேல்பாதி கிராமத்திற்குள் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கவுதமன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேல்பாதி கோவில் பிரச்சினையில், இரு தரப்பினரிடையே ஒரு சுமுகமான சூழல் வந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக சில அரசியல் கட்சிகள், அச்சம்பவத்தை ஊதி பெரிதாக்கி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களது நிலையை உறுதி செய்ய கலவரம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். மேல்பாதி கோவில் சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை அங்குள்ள இரு தரப்பு மக்களும் தாயா, பிள்ளையாக பழகியுள்ளனர். தற்போது அங்குள்ள மக்களே சமாதான சூழலுக்கு வந்த பிறகு ஏன் அங்கு கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story