வேன் மரத்தில் மோதி தொழிலாளி பலி
காரிமங்கலம் அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காரிமங்கலம்
வேன் மரத்தில் மோதியது
கோவை செஞ்சேரிமலை கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது தம்பி மணிகண்டன் (32). இவர்கள் 2 பேரும் சரக்கு வேனில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் யாசின் (24) ஓட்டி வந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. இதில் கண்ணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இருந்து விட்டது தெரியவந்தது. டிரைவர் யாசின், மணிகண்டன் ஆகியோருக்கு லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.