பரிதா குழும சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசார் பயணித்த வேன் விபத்தில் சிக்கியது


பரிதா குழும சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசார் பயணித்த வேன் விபத்தில் சிக்கியது
x

ஆம்பூர் பரிதா குழும வருமான வரித்துறை சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் பயணித்து வேன் விபத்துக்குள்ளானது.

வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனையில் சென்னை ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் டெம்போ டிராவலர் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.

சுமைதாங்கி அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரியின் மீது டெம்போ டிராவலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டெம்போ டிராவலரில் பயணித்த 13 பெண் போலீசாரில். 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்ற பெண் போலீசார் பாதுகாப்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். வருமான வரித்துறை சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சென்ற டெம்போ டிராவலர் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story