மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). இவர் அப்பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் மாடியில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் தண்ணீர் தெளிப்பதற்காக மாடிக்கு சென்றாா். அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக இவரை மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story